பாரினில் பிறந்த பதுமைகளில்
புதுமை மிக்கவள் நீ !
தேரினில் உலா வரும் தேவதையை போல்
என் காவியமாய் நிற்பவள் நீ !
சேற்றில் முளைத்த செந்தாமரையாய்
மனதில் பூத்த மல்லிகை பூ நீ !
கனவில் கண்ட சிலையென
கலைமகள் உருவே உருவானவள் நீ !
உயிரினில் உறைந்த உறவனே
உள்ளம் கொள்ளை கொண்டவள் நீ !
மனதினில் பூத்த பூவென
மலரே உருவானவள் நீ !
கண்ணில் கண்ட பொருளுக்கெல்லாம்
கவிதையாய் மலர்ந்தவள் நீ !
மண்ணில் வாழும் என்னை
உன் மனதில் வாழ மகுடம் சூட்டுவாயா?
engeyo poita da.. Really nice!!!
ReplyDelete